;
Athirady Tamil News

இலங்கையில் 68,000த்தை கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை ; அவதானம் மக்களே

0

இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோய் காரணமாக இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகப்படியான நோயாளர்கள் கடந்த ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளனர். அந்த எண்ணிக்கை 21,538 ஆகும்.

ஜூலை மாதத்தின் கடந்த 12 நாட்களில் மட்டும் 12,692 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகப்படியான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் மாத்திரம் 35,823 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

தெற்கு மாகாணத்தில் 10,657 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,756 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,560 பேரும் என அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.