;
Athirady Tamil News

இரவில் வெளியே சென்ற பெண்ணின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

0

மாத்தளை – லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலவாடிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை (11) இரவு குறித்த பெண் அருகிலுள்ள வீடொன்றிற்குச் சென்றுகொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவர் லக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிவுலவாடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.