;
Athirady Tamil News

அமெரிக்க உள்கட்சி தேர்தல் இந்திய வம்சாவளி டாக்டர் அபார வெற்றி

0

வாஷிங்டன்,

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜனநாயக கட்சியின் உள்கட்சி தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அமிஷ் ஷா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், கட்சித் தலைமையின் ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து அவர் வேட்பாளர் பதவியை கைப்பற்றியுள்ளார்.

48 வயதான அமிஷ் ஷா, ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமிஷ் ஷா, அரிசோனாவில் சுமார் 28 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அவரது நேரடி பிரசாரத்திற்கு வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவு மருத்துவராக பணியாற்றி வரும் அமிஷ் ஷா, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும், இன்சுலின் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்துவதற்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் ஜே பீலியை எதிர்த்து அமிஷ் ஷா போட்டியிட உள்ளார். இந்தப் போட்டி அரிசோனா மாநிலத்தில் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.