;
Athirady Tamil News

ஆபிரிக்க பன்றி காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை!

0

ஆபிரிக்க பன்றி காய்ச்சல் நோய் நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பண்ணைகளிலிருந்து மீண்டும் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு , கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம்இ கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த வைரஸ் தொற்றிய பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் குமாரவடு தெரிவித்தார்.

கவனமாக இருங்கள் அச்சம் கொள்ளதேவையில்லை
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் இந்த நோய் நிலைமையை கடந்த வருடம் பெருமளவில் கட்டுப்படுத்தினோம். ஆனால் இந்த வருடம் சில இடங்களில் இந்நோய் மீண்டும் பதிவாகி வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்காரணமாகவே நாங்கள் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் 48 பண்ணைகளை பரிசோதித்தோம்.

அந்த 48 பண்ணைகளில் தாய் பன்றிகள் மற்றும் வளர்ப்பு பன்றிகளின் மரணத்தை எடுத்துக் கொண்டால் அவை அனைத்திலும் கண்டிப்பாக இந்நோய் நிலைமை காணப்படுவதாக எங்களுக்கு பதிவாகியுள்ளது.

அப்படியாயின் இந்த 48 பண்ணைகளிலிருந்தும் நாங்கள் சுமார் 1200 விலங்குகளை பரிசோதித்துப் பார்த்தபோது அவற்றில் பெரும்பாலான விலங்குகளுக்கு இந்நோய்க்காரணி இருப்பதாகவே உறுதிப்படுத்தப்பட்டது. இந்நோய் குறித்து கவனமாக இருங்கள் அச்சம் கொள்ளதேவையில்லை என்றும் அவர் கூறினார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றினால் நிச்சயமாக இந்நோயின் பரவலைக் குறைக்க முடியும் என்றும் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் குமாரவடு குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.