;
Athirady Tamil News

அமெரிக்காவிற்கே ஆட்டம்… ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் பீதியை ஏற்படுத்திய உக்ரைன் Flamingo ஏவுகணை!

0

ரஷ்ய – உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன், ‘ஃபயர் பாயிண்ட்’ (Fire Point) என்ற தனது உள்நாட்டு நிறுவனத்தின் மூலம் ‘எஃப்.பி-5 ஃப்ளமிங்கோ’ (FP-5 Flamingo) தொலைதூரக் ஏவுகணையை ரகசியமாக உருவாக்கி உள்ளமை ரஷ்ய ராணுவத் தளபதிகளுக்குப் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளின் சோதனைக் மாதிரிகள் பிரகாசமான ‘இளஞ்சிவப்பு’ (Pink) நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருந்ததால், இது ‘பிங்க் ஃப்ளமிங்கோ’ என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கே ஆட்டம்…
இந்த ஏவுகணையின் மிகவும் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால், இதன் என்ஜின்கள் குப்பைக்கிடங்குகளிலிருந்தும் பயன்படுத்தப்படாத பழைய பழைய கடையிருப்புகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டவை .

சோவியத் காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டுப் பயன்பாடின்றி வீசப்பட்ட ‘இவ்செங்கோ ஏஐ-25’ (Ivchenko AI-25) ரக டர்போஃபேன் என்ஜின்களை உக்ரேனியப் பொறியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து, அவற்றில் மலிவான உதிரிபாகங்களைப் பொருத்தி, ஏவுகணையில் இயங்கும் வகையில் வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டொமஹாக்’ (Tomahawk) ஏவுகணையை விட இரண்டு மடங்கு அதிக எடையுள்ள (சுமார் 1,150 கிலோ) வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள், தயாரிப்புச் செலவில் டொமஹாகை விட ஐந்து மடங்கு மலிவானவை என கூறப்படுகின்றது.

சிக்கலான அமைப்புகள் எதுவுமின்றி மிக எளிமையான ஃபைபர் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் உடற்பகுதியைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஏவுகணைகளை, உக்ரைன் ராணுவம் எவ்வித மேற்கத்திய நாடுகளின் அனுமதியுமின்றி ரஷ்ய நிலப்பரப்பிற்குள் மிக ஆழமாகப் பாய்ச்சி வருகிறது.

ரஷ்யாவின் வோல்கோகிராட் மற்றும் செபோக்சரி ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த முக்கிய ராணுவ ஆயுத உற்பத்தி ஆலைகள் மற்றும் போர் விமான உதிரிபாகத் தொழிற்சாலைகள் மீது இந்த ஃப்ளமிங்கோ ஏவுகணைகள் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந் நிலையில் குப்பையிலிருந்து மீட்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு ரஷ்யாவின் ஆழமான ராணுவ அமைப்புகளை உக்ரைன் துல்லியமாகத் தாக்கி வருவது, சர்வதேச ராணுவ வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.