பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை, கொழும்பு, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.