;
Athirady Tamil News

எனது ஆத்மா யாரையும் சும்மாவிடாது ; உயிரை மாய்ப்பதற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

0

சென்னை பாடி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளைஞன் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நிலத்தை அபகரித்து ஆள்மாறாட்டம் செய்து விற்றதால் ஏற்பட்ட மனவேதனையில் வைரமுத்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கு தொடரப்பட்டது.

உடல் நலம்
இதற்கிடையே இளைஞனின் தம்பிக்கு சிறுநீரகம் பாதித்து உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த இளைஞன் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். மேலும் 2 பக்க கடிதமும் எழுதி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ, கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் வைரமுத்து பேசியிருப்பதாவது:- இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். எனது சாவுக்கு காரணம் எங்களுடைய நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் அபகரித்து விற்று உள்ளனர்.

எங்களது நிலத்தை விற்ற அனைவரின் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சும்மா விட்டாலும், எனது ஆத்மா சும்மா விடாது. நிலத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரையும் சும்மா விடமாட்டேன்.

தான் இறந்த பிறகு என்னுடைய 2 சிறுநீரகத்தை எடுத்து எனது தம்பிக்கு வைக்க வேண்டும். நான் இறந்துவிட்டாலும் என்னுடைய உடல் உறுப்புகள் தம்பியின் உடலில் உயிர் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகி இதுவே என்னுடைய கடைசி ஆசை என அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.