;
Athirady Tamil News

அமரர் க.பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம், தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்)

0

அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம் தாயகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
#################################

யாழ். திருநெல்வேலியினை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்த கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது 31ஆம் நாள் மாத நினைவு நாள் தாயக கிராமமொன்றில் விசேட பூசை வழிபாட்டுடன் தானம் வழங்கி உணர்வுப்பூர்வமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” விசேடமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது அன்புப் பேரனான கனடாவில் வசிக்கும் திரு தீபன் ஸ்ரீதரன் அவர்களது முழுமையான நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்காக விசேட மதிய உணவு வழங்கி அன்னாரின் 31 ஆம் நாள் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

தற்போதைய கொரோனா பெருந்தொற்று காரணமாக பயணத்தடை நடைமுறையில் இருப்பதினால் சுகாதார வகையில் உணவு பொதி செய்யப்பட்டு தாயக உறவுகளுக்கு வழங்கப்பட்டது.

குறித்த நாளில் அன்னாரின் நினைவாக வாழ்வாதார உதவியாக கோழிக் கூடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றுக்கு வழங்கப்பட இருந்த போதும் கடையடைப்பு பயணத்தடை காரணமாக கோழிக் கூட்டுக்கான பணி நிறைவுபெறாத காரணத்தால், உடனடியாக மக்களுக்கான மதிய போசனம் வழங்க “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஒழுங்கு செய்யப்பட்டு விசேட நினைவாராதனை இடம்பெற்று நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு கூறப்பட்டது.

இருப்பினும் மிகவிரைவில் வாழ்வாதார உதவியாக கோழிக் கூட்டுக்கான வேலைகள் நிறைவடைந்தவுடன் குறித்த பயனாளிக்கு கோழிக்கூடு வழங்கி வைக்கப்படவுள்ளது.

அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது ஆத்மா சாந்திபெற, எல்லாம்வல்ல இறைவனை வேண்டுவதோடு இந்நிகழ்வினூடாக எமது தாயக உறவுகளுக்கு உதவி செய்த அன்னாரின் உரித்துவழிப் பேரனான கனடாவில் வசிக்கும் திரு தீபன் ஸ்ரீதரன் அவர்களுக்கு தாஈயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

27.09.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.