;
Athirady Tamil News

கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்)

0

கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ##################################

கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு தாயகத்தில் எளிமையாக அதேநேரம் சந்தோசமாக தாயக உறவுகளினால் கிராமங்களில் கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்தவரும், கனடா “நம் தாயகம்” குழுமத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான திரு.பிரின்ஸ் குணரட்ணம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முழுமையான நிதிப்பங்களிப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கனடா பிரின்ஸ் ஆகியோரின் பிறந்தநாளை தாயக சிறுவர் சிறுமியர் பெரியோர்களுடன் பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்துப்பா பாட்டுப் பாடி குதூகலமாக கொண்டாடியதோடு வவுனியா எல்லப்பர் மருதன்குளம் பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் கலந்து கொண்டு கனடாவில் வசிக்கும் பிரின்ஸ் அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

வவுனியா எல்லப்பர் மருதன்குளம் மகளிர் சங்கத்தின் உப தலைவர் திருமதி. சுதர்சினி சாரங்கன் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சமூக சேவையாளரும், ஊடகவியலாளருமான திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைப்பில் முன்பள்ளி ஆசிரியர் திருமதி. ஷர்மிளா குகேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் வவுனியா மகளிர் அமைப்பினர், முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா,
இலங்கை.
31.03.2026

கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ)

 

 

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
https://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. 

https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.