;
Athirady Tamil News

EPF இல் இருந்து 30% நிதியை இலகுவாக பெறலாம் !!

0

கொண்டு வரப்படவுள்ள ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனை சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதுவரை, ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

அதைப் பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. பல சிறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய விதிமுறைகள் காரணமாக ஊழல், முறைகேடுகள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த ஆவணங்களை தயாரிப்பதில் விண்ணப்பதாரர்கள் பெரும் தொகையை செலவு செய்வதாக கிடைத்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, எதிர்காலத்தில் உறுப்பினர்கள் தமது தேவைகளுக்காக 30% நிதியை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், தொடர்ந்து பத்து வருடங்களாக EPF திணைக்களத்திற்கு 300,000 ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள், இந்த 30% முன் நிதியை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.