அமெரிக்கா செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/11/283C7135-4717-4B4A-8A8B-E08431FD0213.jpeg)
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி நாளை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஆண்டனி பிளிங்கிங் மற்றும் அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.