;
Athirady Tamil News

மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்!!

0

நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண் 190 ஐ விட அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பில் 191 ஆகவும், பதுளையில் 169 ஆகவும், கேகாலையில் 155 ஆகவும், களுத்துறையில் 146 ஆகவும், கண்டியில் 126 ஆகவும், இரத்தினபுரியில் 114 ஆகவும், குருநாகலையில் 106 ஆகவும், காலியில் 97 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.