;
Athirady Tamil News

லண்டனில் தற்காலிக விடுதிகளில் வாழும் ஆதரவற்ற சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

வெளியான புதிய தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதியில் நியூஹாமில் கிட்டத்தட்ட 10,000 ஆதரவற்ற சிறார்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

சிறார்களின் எண்ணிக்கை
பிரித்தானியா முழுவதும் குறுகிய கால தங்குமிடங்களில் வசிக்கும் குடியிருப்பற்ற சிறார்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாகவே அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு இளந்தலைமுறை குடியிருப்பற்ற நிலையில் காணப்படுவது உண்மையில் அதிர்ச்சியளிப்பதாக அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. அத்துடன் வாடகை கட்டணம் தொடர்பில் உறுதி அளிக்கப்பட்ட சீர்திருத்தங்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வெளியான தரவுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் நியூஹாமில் தற்காலிக தங்குமிடங்களில் 9,034 சிறார்கள் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டுகளில் இதே பகுதியில் பதிவான தரவுகள் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் பிரித்தானியா முழுவதும் 145,800 சிறார்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிடவும் 15 சதவிகிதம் அதிகம் என்றே தெரியவந்துள்ளது.

இது 12 சதவிகிதம் அதிகம்
ஒரு தலைமுறை சிறார்களின் வாழ்க்கை வீடற்ற நிலையில் இருக்கும் போது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது முறையல்ல என்றும் தெரிவிக்கின்றனர். இது அரசின் தோல்வியாகவே சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குடியிருப்புகள் தேவை என்பதன் அவசரத்தை அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டு உறுதி ஏற்க வேண்டும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 90,000 சமூக கூடங்கள் கட்டுவதற்கு உறுதி கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நியூஹாம் பகுதியில் மட்டும் 6,269 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கின்றனர். ஒட்டுமொத்த பிரித்தானியாவில் கடந்த ஆண்டு மட்டும் 112,660 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வசித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 12 சதவிகிதம் அதிகம் என்றே கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.