;
Athirady Tamil News

உலகின் நீண்ட பேருந்து பயணம் – 22 நாடுகளுக்கு 56 நாட்களில்!

0

துருக்கி, இஸ்தான்புல் நகரத்தில் இருந்து லண்டன் வரை உலகின் நீண்ட பேருந்து பயணத்தை தொடங்கியது “அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் ” நிறுவனப் பேருந்து.

துருக்கியில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இஸ்தான்புல் , இந்நகரத்தில் இருந்து லண்டனுக்கு பேருந்து பயணம் தொடங்கப்பட்டுள்ளது .

2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் 30 பயணிகளுடன் இந்த பயணம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த 12000 கி.மீ உல்லாச பேருந்து பயணத்தை இந்திய சாலைப் பயண வணிக நிறுவன “அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் ” பேருந்து ஏற்பாடு செய்துள்ளது .

கின்னஸ் உலக சாதனையின் படி ,பெருவின் லிமா மற்றும் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவை இணைக்கும் பயணமான 6,200 கி.மீ பேருந்து பயணம் தான் உலகின் நீண்ட பேருந்து பயணமாக இருந்து வந்தது.

இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக “அட்வென்ச்சர்ஸ் ஓவர்லேண்டால் ” பேருந்து பயணம் உள்ளது. இஸ்தான்புல்லிருந்து லண்டன் வரையிலான 12,0000 கிமீ தூரத்தை கடக்க உள்ளது .

நார்வே ஃபிஜோர்ட்ஸைச் சுற்றி கப்பல் பயணம் ,பின்லாந்து வளைகுடா முழுவதும் படகு சவாரி , ஆகியவை இந்த சுற்று பயணத்தில் அமைந்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தின் வடக்கு பகுதில் பயணிப்பது சிறப்பு அம்சமாக இடம் பெற்றுள்ளது . தினசரி மூன்று வேலை உணவு ,தங்கும் ஹோட்டல் இடங்கள் என அனைத்தும் இந்த பயண தொகுப்பில் இடம் பெற்றுள்ளது .

பணிகளுக்கு சொகுசான நாற்காலிகள் , கவலையை போக்க AVX மற்றும் USB பொருட்களும் தனிப்பட்ட பொழுதுபோக்கு அமைப்புகளை வழங்குகிறது.

இந்த பயணத்திற்கான பயணச்சீட்டின் மதிப்பு $ 24,300 ஆக உள்ளது. இலங்கை ரூபாய் மதிப்பில் பயணச்சீட்டின் விலை 7900000ரூ ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.