;
Athirady Tamil News

யாழில். பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் மர்மான முறையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தாவடி பகுதியை சேர்ந்த சி.ஜென்சியா (வயது 31) எனும் குடும்ப பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் கணவரும் , பிள்ளையும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் நிலையில் பெண் தாவடி பகுதியில் வசித்து வந்துள்ளார்.

அந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு உணவு அருந்தி விட்டு தூங்க சென்றவர் மறுநாள் வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் தூக்கத்தால் எழும்பாததால் , வீட்டார் அவரை எழுப்ப முற்பட்ட வேளை , அசைவின்றி காணப்பட்டமையால் , உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

வைத்தியசாலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

பெண்ணின் உயிரிழப்புக்கு காரணம் தெரியாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.