;
Athirady Tamil News

போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் தகுதி தேர்வு எழுத உக்ரைன் அரசு அனுமதி: ஒன்றிய அரசு அறிவிப்பு.!!

0

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட மற்ற வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தங்கள் நாடுகளில் தகுதித்தேர்வினை எழுதுவதற்கு உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வந்துள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் இதற்கு ஒப்புதல் வழங்கியதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயா போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியது. இன்னும் முழுதாக முடிந்தது என்று கூற முடியாத அளவுக்கு போர் நடவடிக்கைகள் நடந்து தான் வருகிறது. போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் அங்கு பயின்று வந்த வெளிநாட்டு மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

வெளிநாட்டு மாணவர்களை அந்தந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக தங்கள் நாட்டுக்கு அழைத்துக்கொண்டது. இதில் மருத்துவம் பயின்ற மாணவர்கள் அந்தந்த நாட்டில் தங்கள் மருத்துவம் படிப்பை தொடர தற்போது உக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக உக்ரைன் நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் எமின் தபரோவா இந்தியா வந்துள்ளார். அவர் தான் இந்த தகவலை கூறியுள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் அவரவர் நாடுகளில் தங்கள் மருத்துவ படிப்பை தொடரலாம் என உக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.