;
Athirady Tamil News

ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை பாராட்டிய கத்தோலிக்க ஆயர்- கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படவில்லை என கருத்து!!

0

கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ இல்லை. ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் கணக்கை தொடங்க பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் பாரதிய ஜனதா விரைவில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

அதற்கேற்ப கேரளாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது அவர்கள் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர். பாரதிய ஜனதாவின் செயல்பாடுகளை தற்போது கிறிஸ்தவ ஆயர்கள் பாராட்டி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி கிடைக்கும் என்று கத்தோலிக்க பேராயர் ஒருவர் கூறினார்.

இப்போது மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலய ஆயர் கீவர்க்கீஸ், பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்த ப்படுகிறார்கள் என்று சர்வதேச அளவில் சிலர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். இது இந்தியாவை அவமதிப்பது போல் உள்ளது. இந்தியா மிகப்பெரிய நாடு. ஆங்காங்கே மனக்கசப்பை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் நடைபெறலாம். அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும், எனக்கூறியிருந்தார். இதுபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டை யும் ஆயர் கீவர்க்கீஸ் பாராட்டி உள்ளார். ஆர்.எஸ்.எஸ்.சில் பல நல்ல விசயங்கள் உள்ளன.

உடற்பயிற்சி என்பது தற்காப்புக்காக மேற்கொள்வது. மேலும் பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை, என்றும் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கத்தோலிக்க ஆயர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்தடுத்து பாராட்டு தெரிவித்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.