;
Athirady Tamil News

பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கர்நாடகா முதல் மந்திரி !!

0

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்த பெருமைக்கு உரியவர் ஜெகதீஷ் ஷெட்டர். அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக கட்சிக்கு எதிராக சில விஷயங்களைக் கூறி வந்துள்ளார். இதனால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது. கட்சியின் மூத்த தலைவரான ஷெட்டர் 6 முறை தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

முன்னாள் முதல் மந்திரி, சபாநாயகர், கட்சி தலைவர், மூத்த தலைவர் மற்றும் மந்திரி ஆகிய பதவிகளையும் வகித்துள்ள அவரிடம் இந்த முறை போட்டியிட வேண்டாம் என கட்சி அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர். இதற்கிடையே, ஜெகதீஷ் ஷெட்டர் இன்று கூறுகையில், கட்சியை சில தலைவர்கள் தவறாக கையாளுகின்றனர். கட்சி எம்.எல்.ஏ. பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

தனக்கு எதிராக சதி நடக்கிறது. அதனால் கட்சியில் தனக்கு சீட் வழங்கவில்லை என தெரிவித்தார். இந்நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் தனது பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அதற்கான பதவி விலகல் கடிதம் ஒன்றை சபாநாயகர் விஷ்வேஷ்வர் ஹெக்டே ககேரியை சிர்சி நகரில் வைத்து இன்று நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்து உள்ளார். இதையடுத்து, அவரிடம் காங்கிரசில் சேருவீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, நான் இன்னும் முடிவு செய்யவில்லை என பதிலளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.