;
Athirady Tamil News

கொழும்பில் வெடித்த போராட்டம்: முற்றாக முடக்கப்பட்ட லோட்டஸ் வீதி

0

இலங்கையில் அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மற்றும் நாளை சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்தது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கும் முகமாக குறித்த குழுவின் உறுப்பினர்களால் கொழும்பில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேரணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்விசாரா ஊழியர்கள், இன்று நண்பகல் 12 மணி முதல் தொடர் பணி விலகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்க நடவடிக்கை
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.