;
Athirady Tamil News

மேற்கு வங்க மாணவி கொலை.. போலீஸ் மீது அதிருப்தி – காவல் நிலையத்தை தீ வைத்து எரித்த மக்கள்!!

0

மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டத்தை அடுத்த கலிகஞ்ச் காவல் நிலையத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி மற்றும் ராஜ்பங்சி சமூகத்தினர் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரிகார்டுகளை உடைத்து, காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினர். போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். எனினும், போராட்டக்காரர்கள் அத்துமீறி காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை தீ வைத்து எரித்தனர். அந்த பகுதியில் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், 10 ஆம் வகுப்பு மாணவியை கும்பல் ஒன்று கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது.

பின் மாணவியின் உடல் குளக்கரையில் வீசப்பட்டு இருந்தது. மேலும் உயிரிழந்த மாணவியின் உடலை காவல்துறை அதிகாரிகள் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மாணவியை ஜாவித் அக்தர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.