Nayanthara – குடிக்கு அடிமையான நயன்தாரா… இவர்தான் திருத்தியதா?.. எல்லை மீறிய பயில்வான் ரங்கநாதன்!! (PHOTOS)
Nayathara (நயன்தாரா) நடிகை நயன்தாரா குடிக்கும், புகைக்கும் கடுமையாக அடிமையாகியிருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நயன்தாரா. அதனையடுத்து தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். திறமையும், கவர்ச்சியும் ஒருசேர அவரிடம் இருந்ததால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன.
சிம்புவுடன் காதல்: இப்படிபப்ட்ட சூழலில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் இணைந்து நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. இதன் காரணமாக அந்தப் படத்தில் சிம்புவுடன் அளவுக்கு மீறிய நெருக்கம் காட்டினார் நயன். இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதி என்று நினைத்த சூழலில் சில காரணங்களால் பிரேக் அப் ஆகிவிட்டது. அந்த சமயத்தில் வெளியான புகைப்படங்கள் சில பெரும் சர்ச்சையை கிளப்பின.
பிரபுதேவாவுடன் காதல்: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு வில்லு படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார். அவருக்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து ஹிந்து மதத்திற்கு மாறி பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சையும் குத்திக்கொண்டார். அதுமட்டுமின்றி சினிமாவிலிருந்து ஒதுங்கவும் முடிவு செய்தார். ஆனால் அந்தக் காதலும் பிரேக் அப்பில் முடிய மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தார் நயன்.
இரண்டாவது இன்னிங்ஸில் காதல்: தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் நயன். அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
குடிக்கு அடிமையான நயன்: இந்நிலையில் நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் ஒரு விஷயம் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. சமீபத்தில் ஒரு வீடியோவில் அவர், “நயன்தாரா சிம்பு, பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் பிரேக் அப் ஆகிவிட்டது. சிம்புவுடன் காதலில் இருந்தபோது குடிக்கு அடிமையாகியிருந்தார் நயன். சிம்புவுடன் பல முறை பப்புகளுக்கு சென்றிருக்கிறார். குடி மடுமின்றி புகை பழக்கத்துக்கும் அடிமையானார்.
திருத்திய விக்னேஷ் சிவன்: அந்தக் காதலும், பிரபுதேவாவுடனான காதலும் பிரேக் அப் ஆன பிறகு விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தனர். அப்போதும் நயன்தாராவுக்கு குடி பழக்கமும், புகை பழக்கமும் போகவில்லை. இருப்பினும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தினார். தினமும் குடித்துக்கொண்டிருந்தவரை வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கும்படி மாற்றினார்.
அதேபோல் புகைப்பழக்கத்தையும் படிப்படியாக குறைக்க வைத்தார். நயன் தாராவும் விக்னேஷ் சிவன் தன் மேல் வைத்திருக்கும் காதலை உணர்ந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிலிருந்து வெளியே வந்தார்” என்றார். பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தொடர்ந்து பிரபலங்கல் குறித்து இவ்வாறு பேசி வரும் அவரை ஏன் யாரும் கண்டிப்பதில்லை. ஒரு வழக்கு போட வேண்டியதுதானே ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.