;
Athirady Tamil News

கிம் ஜாங் உன் ரகசிய உத்தரவு – வெளிக்கொண்டுவந்த தென்கொரியா !!

0

வடகொரியாவின் அதிகரிக்கும் தற்கொலை மரணங்களுக்கு எதிராக ரகசிய தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் உளவுத்துறையின்படி, வடகொரியாவில் தற்கொலை அதிகரித்துள்ள சூழ்நிலையில் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் தலையிட்டுள்ளார்.

தற்கொலையை தேசத்துரோகம் என்று அறிவித்த கிம், அதைத் தடுக்க அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளை வழங்கினார்.

தேசத்துரோகத்துக்கு மரண தண்டனை விதிக்கப்படும் நாட்டில் தற்கொலைக்கு என்ன தண்டனை என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட நெருக்கடிகளால் நாட்டில் தற்கொலை 40% அதிகரித்துள்ளது. வறுமையின் காரணமாக குடும்பங்கள் மொத்தமாக இறக்கும் நிகழ்வுகளும் பரவலாக உள்ளன.

கடந்த ஆண்டில் வடகொரியாவின் Gongjin பகுதியில் 35 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் .

இதற்கிடையில் கடந்த ஆண்டு வடகொரியாவில் பட்டினி சாவுகள் மும்மடங்காக அதிகரித்தது. இதனாலேயே வடகொரியா தற்கொலைக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கிம் உள்ளூர் அரசாங்க அதிகாரிகளுக்கு அவர்களின் அதிகார எல்லைக்குள் தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பை வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.