;
Athirady Tamil News

நெதன்யாகுவை கைது செய்ய பிடியாணை: கொலம்பிய அதிபர் வெளிப்படை

0

காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு கொலம்பியாவின் அதிபர் குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) சர்வதேச இராணுவ நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலையை மேற்கொண்டு வருவதாகவும் நெதன்யாகு இனப்படுகொலையாளியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் எனவும் கொலம்பிய அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் காசா பகுதியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களை கொன்று நாயகன் ஆகவில்லை என கொலம்பிய அதிபர் X சமூக வலைதளத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாசி இராணுவம்
அத்தோடு, ஐரோப்பாவில் இலட்சக்கணக்கான யூதர்களை கொன்ற நாசி இராணுவத்திற்கும் இஸ்ரேல் பிரதமருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என அதிபர் குஸ்டாவோ பெட்ரோ குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இஸ்ரேல் ஒரு இன அழிப்பை வெளிப்படையாகவே முன்னெடுத்து வருவதாகவும், இதனால் அந்த நாட்டுடனான தூதர உறவுகள் அனைத்தையும் துண்டித்துக்கொள்வதாக இந்த மாத தொடக்கத்தில் அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.