;
Athirady Tamil News

LRT திட்டத்தை மீண்டும் கையில் எடுத்தார் ஜனாதிபதி!!

0

இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்துடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, மீண்டும் இலகு ரயில் திட்டத்தை செயற்படுத்தும் வகையில் பொருத்தமான காலக்கெடுவை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் யோசனை முன்வைக்கப்பட்டது.

ஜப்பானின் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தீர்மானித்ததையடுத்து, இலங்கைக்கு 5,978 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பயணிகளுக்கு சிறந்த பொது போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் 2016 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.