;
Athirady Tamil News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மஞ்சள் நிற பஸ்களை தொடங்கி வைக்கிறார்!!

0

கடந்த ஆட்சியில் பச்சை நிறத்தில் இயக்கப்பட்ட அரசு போக்குவரத்து கழக பஸ்கள், பி.எஸ்.4 ரக தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பஸ்கள் நீல நிறத்திலும், நகர, மாநகர பஸ்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. அதிலும் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பஸ்களை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.

அதன்படி அடிச்சட்டம் நல்ல நிலையில் இயக்கத்தில் உள்ள பஸ்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு அவற்றுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. நிறம் மட்டுமின்றி, பஸ்களின் இருக்கை, அமரும் வசதி போன்றவையும் விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் முதல்கட்டமாக 100 பஸ்கள் வருகிற 11-ந்தேதி முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்த பஸ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.