;
Athirady Tamil News

பிரித்தானிய நகரின் பல பகுதிகளில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்… வெளியான புகைப்படம் உள்ளிட்ட தகவல்

0

பிரித்தானியாவின் Salford நகரின் பல பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் பெயர் உட்பட பிரதான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உடல் பாகங்கள்
குறித்த நபர் 67 வயதான Stuart Everett என அதிகாரிகள் தரப்பு நம்புவதாக தெரிவித்துள்ளனர். கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள Kersal Dale அருகே கீழ் முதுகு, தொடை உள்ளிட்ட சில உடல் பாகங்கள் cellophane தாள்களில் சுற்றப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏப்ரல் 4ம் திகதி முதல் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து Salford நகரின் பல பகுதிகளில் இருந்து எஞ்சிய உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பில் ஏப்ரல் 26ம் திகதி 68 வயதான Michal Jaroslaw Polchowski மற்றும் 42 வயதான Marcin Majerkiewicz ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் கொலை வழக்கு தொடர்பில் திங்கள்கிழமை Tameside மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மூன்று பகுதிகளில்
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைத்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அதிகாரிகள், தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். Stuart Everett என்பவரின் உடல் பாகங்கள் மொத்தம் மூன்று பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றாலும், அந்த உடல் பாகங்கள் ஒரே நபருடையது என்றே நம்புவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.