;
Athirady Tamil News

நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைப்பு!!

0

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்க உள்ளது.

இந்நிலையில், நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 153*163 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுற்றுவட்டப்பாதை தற்போது 113*157 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. லேண்டரில் உள்ள 4 இயந்திரங்களில் 2 இயரந்திரங்கள் இயக்கப்பட்டு லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. லேண்டரின் அடுத்த செயல்பாடு ஆகஸ்டு 20ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டரை வரும் 23ம் தேதி நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.