;
Athirady Tamil News

100 நாட்களில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு படைத்த சாதனை!

0

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்றது முதல் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன.

இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் , தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

100 நாட்களில் சாதனை
சென்னையில், நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் விஜய் முன்னிலையில் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 8 திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார். 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்

777.74 கோடி ரூபாய் செலவிலான சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில்துறை வீட்டுவசதி ஆகிய நிறுவனங்களின் 2 திட்டங்கள் மற்றும் 13 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்ததுடன் ,9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.