;
Athirady Tamil News

ரஷ்யாவில் இருந்து பரிசுகளுடன் வீடு திரும்பும் கிம் ஜோங் உன் !!

0

வட கொரியத் அதிபர் கிம் ஜோங் உன் திங்கள்கிழமை(18)பல பரிசுகளுடன் வீடு திரும்பியுள்ளார்.

வட கொரிய மூன்று தலைமுறை தலைவர்கள் பெற்ற பரிசுகள் வைக்கப்பட்டுள்ள “நட்பு” அருங்காட்சியகத்திற்கு அவர் கொண்டு வரும் சில பொருட்கள் பின்வருமாறு.

ரஷ்யாவிலிருந்து பரிசுகள் ரஷ்ய அதிபர் புட்டினுடனான அவரது உச்சிமாநாட்டிற்குப் பிறகு, கிம் இன் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் கூற்றுப்படி, ரஷ்ய தயாரிப்பான “உயர்ந்த தரமான” துப்பாக்கியைப் பெற்றுள்ளார்.

மேலும், கிம் ஜோங்உன் வட கொரிய கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை ரஷ்ய அதிபர் புடினுக்காக கொடுத்துள்ளார்.

அத்தோடு பிரிமோர்ஸ்கி பிராந்தியத்தின் ஆளுநரான ஒலெக் கோஜெமியாகோ, மார்பு, தோள்கள், தொண்டை மற்றும் இடுப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் தாக்குதல் நடவடிக்கைகளுக்காக நவீன, இலகுரக உடல் கவசம் ஒன்றை கிம் ஜாங் உன் இற்கு வழங்கினார், என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, கிம் இற்கு ஐந்து ஒருவழி தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் ஒரு ஜெரனியம்-25 உளவு ட்ரோன் வழங்கப்பட்டது, இது உக்ரைனில் போரில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.