;
Athirady Tamil News

புவிசார் அரசியல் போட்டிக்கு தயாராகும் இலங்கை

0

புவிசார் அரசியல் போட்டியின் காரணமாக , தற்போது 5ஜீ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இலங்கை கவனம் செலுத்தி வருகின்றது.

அந்தவகையில், அடுத்த ஆண்டு (2024) முதல் இலங்கையில் 5ஜீ தொழில்நுட்பத்தை சரியான முறையில் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஆரம்ப கட்டமாக அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தின் போது Huawei இன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

டிஜிட்டல் மயமாக்கும் ஒப்பந்தம்
அங்கு Huawei நிறுவனத்தினால் இலங்கைப்பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஒப்பந்தம் ஒன்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த 5ஜீ தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்துவது தொடர்பான விடயத்தில் எச்சரிக்கையான அணுகுமுறையினை இலங்கை கையாள வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

5ஜீ அல்லது 5ஆவது தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பம், சுய-ஓட்டுநரை உடைய கார்கள், பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள், தொலைதூரத்தில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நோயாளிகளை இணைக்கும் தொலை அறுவை சிகிச்சை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், பொது சேவைகள் போன்ற பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவதால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றுவதே 5ஜீ ஆகும்.

புவிசார் அரசியல் போட்டி
ஒரு ஆய்வின்படி, 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 6 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் அல்லது உலக மக்கள் தொகையில் 75 சதவீதமானோர் ஒவ்வொரு நாளும் தரவுகளுடன் வாழத் தொடங்கியிருப்பார்கள், என்று தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், புவிசார் அரசியல் போட்டியின் காரணமாக எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்துடனும் இணைந்து 5ஜீ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனமாக, செயற்பட வேண்டும்.

மேலும் இந்த விடயத்தில் எந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்துடனும் இலங்கை அணிசேர்வது குறித்து எந்த நாடும் இதுவரை தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.