;
Athirady Tamil News

இலங்கையில் அமைச்சர் ஒருவரின் மகன் என தெரிந்ததும் நடந்த அதிரடி சம்பவம்!

0

போக்குவரத்து விதியை மீறியதற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர் டிரான் அலஸின் மகன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கலகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை கடக்க முற்பட்டபோது வெள்ளைக் கோட்டைக் கடந்துள்ளார்.

இதனையடுத்து, அமைச்சரின் மகன் தவறை ஒப்புக்கொண்டதால், அவருக்கு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் அபராதச் சீட்டு வழங்கியுள்ளனர்.

அபராதம் செலுத்த அருகில் உள்ள தபால் நிலையம் எது என்று பொலிஸாரிடம் அமைச்சரின் மகன் கேட்டுள்ளார்.

அப்போது பொலிஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தான் பொது மக்கள் பாதகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகன் என அவர் கூறியுள்ளார்.

பின்னர் பொலீஸ் அதிகாரிகள், அவர் யார் என்று ஏன் கூறவில்லை எனக் கேட்டதுடன், அபராதப் பணமான 1,100 ரூபாவை தபால் நிலையத்திற்கு எடுத்துச் சென்று செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டு மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அமைச்சரின் மகனிடம் கொடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.