;
Athirady Tamil News

சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு

0

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியின் கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த விபத்தை அடுத்து சந்தேகநபரான சாரதியின் கையடக்க தொலைபேசி கந்தானை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

விளக்கமறியல் உத்தரவு
இந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க பொலிஸ் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.