;
Athirady Tamil News

நாட்டில் திறமைமிக்க இளைஞர்களை உருவாக்க ஸ்மார்ட் யூத் திட்டம்: மனுஷ நாணயக்கார

0

ஸ்மார்ட் யூத் திட்டம் உங்களை உலகிற்கு மதிப்புமிக்க மனிதர்களாக மாற்ற வழிவகுக்கிறது. இங்கு வருகைத்தந்துள்ள இளைஞர்களை அன்புடன் வரவேற்கிறேன். நீங்கள் இந்த நாட்டின் எதிர்காலம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (18.02.2024) “இலங்கையை வெற்றி கொள்வோம்” நடமாடும் மக்கள் சேவையின் இரண்டாம் நாளின் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகைலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஸ்மார்ட் யூத் திட்டம்
அவர் மேலும் தெரிவித்தாவது,

“ உங்களை முன்னேற்றுவதற்காக தான் ஸ்மார்ட் யூத் திட்டத்தை தொடங்கினோம். மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்துடன் இணைந்து பிரதேச செயலாளர்கள் ஊடக சகல பிரதேச செயலகத்திலும் “ஸ்மார்ட் யூத்” குழுவை அமைத்துவருகிறோம்.

எதிர்காலத்தில் பிரதேச செயலாளர்கள் மூலம் கிராம சேவகர் பிரிவுகளிலுமிருந்து குறைந்தது பத்து பேரைகொண்ட குழுவை இணைக்குமாறு கேட்டுக்கொள்வோம். இன்று நாம் ஆரம்பித்து இருப்பது ஒரு தேசிய வேலைத்திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சிகளை பெற்று வரும் இளைஞர்களை விரைவில் வேலைக்கு அமர்த்துவதும், நவீன உலகிற்கு ஏற்ற தொழிலாளர் குழுவை உருவாக்குவதும் எங்கள் நோக்கம். அதற்கு மாறாக வரலாற்றை குறை சொல்லி கல்வி கற்பதில் அர்த்தமில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்பே கல்வித் திட்டம் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பே பாடத்திட்டம் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்கல்வி மாற்றப்பட்டிருக்க வேண்டும். அவை நடைபெறாததால் இப்போது குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை.

ஜனாதிபதியின் ஆலோசனை
இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டும். எதிர்கால உலகிற்கு உங்களை தயார்படுத்துகிறோம். உங்களுக்கு 10,000 வேலைவாய்ப்புக்கான பயிற்சிகளை அளிக்குமாறு எங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்காக அனுசரணையை ஜனாதிபதி நிதியம் அளிக்கும். இவ்வாறு பயிற்சிகளை அளிப்பதன் மூலம் உங்களுக்கான தேவையை நிறைவேற்ற விரும்புகிறோம். நீங்கள் அரசியல்வாதியிடம் சென்று எனக்கு வேலைவாய்ப்பு கொடுங்கள் என்று கேட்காதீர்கள், உங்களை வேலைவாய்ப்பு களுக்கு ஏற்ற நபராக மாற்ற விரும்புகிறோம்.

நீங்கள் உங்களை மனரீதியாக பலப்படுத்தி வேலைவாய்ப்புகளுக்காக தயார்படுத்திக் கொள்ளவே இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் யூத் திட்டம் என்பது பல்வேறு தொழிற்சிகளை வழங்கும் ஒரு திட்டமாகும் எதிர்காலத்தில் உலகில் பராமரிப்பாளர் தாதியர் வேலைவாய்ப்புகளுக்கான வெற்றிடம் ஏற்படும் . அதற்கான பயிற்சிகளை பெற வேண்டும்.

கதிர்காமக் கோயிவிலின் பணத்தில் 300 மாணவர்களுக்கு கொரிய மொழி கற்பிக்கப்படுதையும்சுட்டிக்காட்டினார். இலங்கை சுற்றுலா சபையினால் ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறி பயிற்சி 150 மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதையும் நான் இன்று(18) காலை கதிர்காமம் கோவிலுக்கு சென்ற வேலை அவதானித்தேன்.

ஹோட்டல் முகாமைத்துவ பாடநெறியை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ஷங்ரிலாவில் ஹோட்டலில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது . நான் துபாயிலிருந்து வந்ததும் ஐ.டபிள்யூ.எச் என்ற பெரிய நிறுவனத்துடன் கலந்துரையாடினேன்.

100 தொழிலாளர்களுக்கு பயிற்சி
துபாய் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள அவர்களது ஹோட்டல்களில் பணிபுரிய ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 100 தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அவர்கள் தயாராக உள்ளனர். ஹோட்டல் துறையில் பெரிய வெற்றிடம் காணப்படுகிறது மேலும், செவிலியர் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கொரியாவின் கப்பல் கட்டும் துறையில் இஸ்ரேலில் விவசாய துறையில் தற்போது இருபதாயிரம் வேலைகள் உள்ளன உங்களுக்கு நல்ல தகுதியான சம்பளம் வழங்கப்படும்.

கடந்த வெள்ளிக்கிழமை(16) இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் என்னை வந்து சந்தித்தார். பாரிய திட்டங்களுக்கு திறமையான தொழிலாளர்கள் தேவை. நவீன உலகத்திற்கு ஏற்ற தொழிற்பயிற்சியைப் வழங்கி வெளிநாடுகளுக்கு சிறந்த தொழிலாளர்களை அனுப்புவதற்கு நாம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.