;
Athirady Tamil News

தொலைக்காட்சி’ல என் கட்சி பேர கூட சொல்ல மாட்றீங்க..அவளோ பயம் உங்களுக்கு…? சீமான் கேள்வி

0

சின்னம் தொடர்பாக நாம் தமிழர் சீமான் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்.

கரும்பு விவசாயி சின்னம்
நாம் தமிழர் கட்சி தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை முன்வைத்து தான் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. ஆனால், இந்த தேர்தலில் அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் பிரஜா ஐக்கிய கட்சி கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த சின்னத்தை கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் சீமான். சுயேட்சைகளுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பிரச்சாரத்தில் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றார் சீமான்.

இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இது குறித்து அவர் பேசியது வருமாறு,

அவளோ பயம்…
போட்டியில நா இல்ல’னு அவுங்க சொன்ன நா போட்டியில் இல்லையா என்ன..? அப்ப போட்டியிலயே இல்லாதவன் சின்னத்தை எதுக்கு எடுத்துகிட்டிங்க..? உங்களுடன் கூட்டணி வைத்தால் சின்னம் வருகிறது..கூட்டணி வைக்கல என்றால் சின்னத்தை எடுத்து முடக்கிடுறீங்க. 40 தொகுதிகளில் சுயேச்சை எதுக்கு சின்னம் கொடுத்தீங்க.

.சரி போடவெச்சா…எனக்கு வாக்கு மெஷின்’ல 5’னா அவுங்களுக்கு 8 ஒதுக்குற. அப்படினா என்னுடைய வாக்கை மாற்றி போடவெச்சி என்னுடைய வாக்கை சரியவைக்க நினைக்குற…பயப்படுற’ல. பயப்பட’ல’னா எதுக்கு NIA ஏவி விட்ட. லட்சக்கணக்கான இளைஞர்கள் சீமான் பின்னாடி போறத தடுக்க நினைக்கறீங்க.

இதெல்லாம் பயமில்லாமல செய்யுறீங்க. தொலைக்காட்சி’ல என்னோட பேர், சின்னத்தை சொல்லவே பயப்படுறீங்களே ஏன்..? இல்ல அவளோ தீண்டாமையா…மற்ற கூட்டணி’ல தனியா சொல்லிட்டு..என்ன மட்டும் மற்றவை’ல வைக்குற… ஸ்டாலின் கட்சியா திமுக..? எடப்பாடி கட்சியா அதிமுக..? 10 ஆண்டு மேல ஆட்சி’யில இருக்க பாஜக.. உங்க கட்சியா அதெல்லாம். இது என் கட்சி..என் சின்னம். எனக்கு வரும் ஓட்டு. நோட் இல்லனா ஓட்டு வருமா..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.