;
Athirady Tamil News

செயற்கை நுண்ணறிவை கையில் எடுத்த இஸ்ரேல்.. அதிர வைக்கும் ரகசிய தகவல் அம்பலம்!

0

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் செயற்கை நுண்ணறிவுத் (Artifical Intelligens) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்கும் இலக்கினை நிர்ணயித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 972இற்கும் மேற்பட்ட செய்தி நிறுவனங்களும், செய்தி இணையத்தளங்களும் இணைந்து செய்தி விசாரணை மேற்கொண்டுள்ளன, இதன்போது இஸ்ரேலின் செயற்கை நுண்ணறிவுத் (Artifical Intelligens) தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் மற்றும் அதன் வளர்ச்சியில் உடனிருந்த 6 அதிகாரிகளிடம் அவர்கள் பேசியுள்ளனர்.

செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் லவண்டர் என்கிற செயற்கை நுண்ணறிவுத் (Artifical Intelligens) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரே முறையில் 37 ஆயிரத்துக்கும் அதிகமான,ஹமாஸ் அமைப்பினராக இருப்பதற்கு சாத்தியமுள்ள நபர்களை இலக்குகளாக இஸ்ரேல் கண்டறிந்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பாதுகாப்புப் படை
இதற்கு, முன்னர் ‘கோஸ்பெல்’ என்கிற செயற்கை நுண்ணறிவு (Artifical Intelligens) குறித்து தகவல்கள் வெளியானது, இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கோஸ்பெல் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்த சாத்தியமுள்ள இடங்களை, கட்டடங்களை கண்டறியும். ‘லவண்டர்’ மனிதர்களை கண்டறியும் என கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்புப் படையின் உயர்மட்ட பிரிவினரால் இந்த செயற்கை நுண்ணறிவு (Artifical Intelligens) வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தத்துக்கு உள்ளானோம். ‘அதிக இலக்குகளை கொண்டு வாருங்கள்’ என அதிகாரிகள் கத்தினர். எங்களிடம் சொல்லப்பட்டது: ‘நாம் ஹமாஸை தீர்த்து கட்ட வேண்டும். என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை. நீங்கள் செய்ய வேண்டியது தாக்குவது மட்டுமே” எனத் தெரிவித்துள்ளார்.

முதலில் செயற்கை நுண்ணறிவுத் (Artifical Intelligens) தொழில்நுட்பத்தை சோதிக்கும்போது உடனிருந்த அதிகாரிகள், லவண்டர் போரில் எவ்வாறு பயன்பட்டது என்பதை குறித்து தெரிவித்தனர்.

அடையாளம் காட்டியது
மேலும், இந்த போரில் முக்கியமான பணியை லவண்டர் செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுகின்றனர். ஹமாஸ் கிளர்ச்சியாளர்களின் பல்வேறு தரவுகளை லவண்டர் தயாரித்து கொடுத்ததாகவும் போரின் ஒரு கட்டத்தில் 37 ஆயிரம் பலஸ்தீனர்கள் வரை லவண்டர் அடையாளம் காட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

போரின் ஆரம்பத்தில் இந்த தரவுகள் எந்தவிதத்திலும் மறுஆய்வு செய்யப்படாமல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணை அறிக்கை குறிப்பிடுகிறது, தவிரவும் போரில் ஹமாஸ் அமைப்பினர், என கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் தாக்கப்படும்போது உடனிருப்பவர்கள் சேர்ந்து உயிரிழக்க நேரிடும். அதற்கான அளவையும் இஸ்ரேல் கொண்டிருந்ததது என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தி நிறுவனத்தின் தகவல்களை இஸ்ரேல் முற்றிலும் மறுத்துள்ளது. அப்படியான இலக்கை நிர்ணயிக்க எந்த செயற்கை நுண்ணறிவுத் (Artifical Intelligens) தொழில்நுட்பத்தையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. மேலும், தகவல் அமைப்புகள் என்பவை இலக்கை நிர்ணயிப்பவர்களுக்கு கருவியாக மட்டுமே பயன்படும் என மறுத்துள்ளது.

அதே போல, ஹமாஸ் வீரருக்கு இத்தனை மக்கள், கொல்லப்படலாம் என்கிற எந்த கணக்கும் இல்லை. தவறான திசையில் செலுத்துகிற செய்தி அறிக்கை இது என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லெர்னர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.