;
Athirady Tamil News

தென்கொரியாவில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் : பிரதமரின் அதிரடி முடிவு

0

இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன(Dinesh Gunawardena) தென்கொரியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டு பிரதமர் ஹான் டக் சூவை(Han Duck Soo) சியோலிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது கடந்த வியாழக்கிழமை(04) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கைக்கு பல புதிய தொழில்வாய்ப்புகளுக்கான வழிகள் திறக்கப்படுமென்று பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தென்கொரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி
விவசாயம் மற்றும் நிர்மாணத்துறை உட்பட வேறு கைத்தொழில் துறைகளில் தனது நாட்டில் தொழில்வாய்ப்பில் ஈடுபட்டிருக்கும் தொழில் படைக்கு மேலதிகமாக சுகாதார சேவைகள் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் தென்கொரிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தகால நிதி நெருக்கடியின் பின்னர் மீளெழுச்சி பெற்ற இலங்கைக்கு பரிஸ் கழகத்தின் அங்கத்துவ நாடென்ற வகையில் எதிர்கால செயற்பாடுகளின் வெற்றிக்காக தமது நாடு எப்போதும் துணை நிற்குமெனவும் தென்கொரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரியா மக்களும் இலங்கைக்கு விஜயம் செய்வதை மிகவும் விரும்புவதாகவும் மற்றும் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க ஆதரவளிப்பதாகவும் தென்கொரிய பிரதமர் இணக்கம் தெரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.