;
Athirady Tamil News

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப மற்றொரு நாடு திட்டம்

0

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.

சுவிட்சர்லாந்து பிரித்தானியாவைப் பின்பற்றுகிறதா?
சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கபட்ட, எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.

ஆக, சுவிட்சர்லாந்து பிரித்தானியாவைப் பின்பற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்விக்கான பதில் என்னவென்றால், சுவிட்சர்லாந்தின் திட்டம், பிரித்தானியாவின் திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பிரித்தானியா சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களையும் ருவாண்டாவுக்கு அனுப்பவிரும்புகிறது.

ஆனால், சுவிட்சர்லாந்து அப்படியல்ல, புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட எரித்ரிய நாட்டவர்களை மட்டுமே ருவாண்டாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பதையும் வேறொரு நாட்டிடம் கையளிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. ஆனால், சுவிட்சர்லாந்து, தானே புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கிறது.

எதனால் இந்த திட்டம்?
அதாவது, எரித்ரியா நாடு, திருப்பி அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தன் நாட்டவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆகவேதான், சுவிட்சர்லாந்தில் வாழும் 300 எரித்ரிய நாட்டவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.

இந்த திட்டம் ஏற்கனவே சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையின் ஆதரவைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம், நாடாளுமன்றத்தில் மேலவையில், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.