;
Athirady Tamil News

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

0

சென்னையில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கடுமையான அக்னி வெயிலில் கட்டுமான வேலை பார்த்துக்கொண்டிருந்த வடமாநில தொழிலாளிக்கு, கால் உணர்வு இல்லாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வடமாநில தொழிலாளி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு, சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹீட் ஸ்ட்ரோக் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்:

அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும். அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டோரை குளிா்ந்த நிழல் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அவா்களது கூடுதல் ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயா்த்தி படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா் விழிப்புடன் இருந்தால் குளிா் திரவங்களை தரலாம். தண்ணீா், மோா், எலுமிச்சை சாறு, நீா், உப்பு நீா் கரைசலும் தரலாம்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவா் சுயநினைவின்றி இருந்தால் அவரை வேகமாக குளிா்விப்பது அவசியம். அவரின் ஆடைகளை தளா்த்தி குளிா்ந்த நீரினை உடம்பில் ஒற்றி எடுக்கலாம். அவரது அக்குள் மற்றும் கவட்டியில் ஈரத்துண்டு, ஐஸ்பேக் மூலம் ஒற்றி எடுக்க வேண்டும். மின்விசிறியின் காற்று அவரது உடலில் படவேண்டும். குளிா்சாதன அறையை பயன்படுத்தலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.