;
Athirady Tamil News

வருகை தரும் விசா தொடர்பான சர்ச்சை: விளக்கமளித்த டிரான் அலஸ்

0

வருகை தரும் விசா (On Arrival Visa) வசதி தொடர்பான சர்ச்சைக்குரிய சூழ்நிலை குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) விளக்கமளித்துள்ளார்.

குறித்த தகவலை இன்று(06) அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய விசா முறை தொடர்பான யோசனை நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி கடந்த ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

விசா கட்டண விவகாரம்
அத்துடன் விசா கட்டண விவகாரமும் நிறைவேற்றப்பட்ட யோசானையின் ஒரு பகுதியாவதுடன் இவ்வாறு நவம்பர் மாதம் யோசனை நிறைவேற்றப்பட்டாலும் ETA எனப்படும் மின்னணு பயண அங்கீகாரம்(Electronic Travel Authorization) முறைமை மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.

அதன்படி ETA முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த முறைமையை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.