தொழில்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல்
கொழும்புக்கு அடுத்த ஏக்கலை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 7 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை முற்றுமுழுதாகக் கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்ட போதிலும் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.