;
Athirady Tamil News

வீசாவின் தோல்வி குறித்த விபரங்களை வெளியிட வேண்டாம் : ஹர்சா டி சில்வா

0

பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு அதன் உணர்திறன் தன்மை காரணமாக வீசாவின் தோல்வி குறித்த எந்த விபரங்களையும் தற்காலிகமாக வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஹர்சா டி சில்வா (Harsha de Silva)தெரிவித்துள்ளார்.

இலங்கை வீசா அவுட்சோர்சிங் (மூன்றாம் தரப்பு) ஒப்பந்தம் தொடர்பான கலந்தாய்வுகள் இன்று(09.05.2024) நாடாளுமன்ற கட்டிடத்தில் பொது நிதிக்கான நாடாளுமன்றக்குழு முன்னிலையில் ஆரம்பமாகியதோடு, இது தொடர்பான கலந்தாய்வுகளை எதிர்வரும் 14 அன்று மீண்டும் தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வீசா மோசடி

இந்தநிலையில் குறித்த பிரச்சினையின் உணர்திறன் தன்மை காரணமாக, கலந்தாய்வு விடயங்களை ஊடகங்களுக்கு வெளியிடவேண்டாம் என்று முடிவெடுத்ததாக ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.

மே 14ஆம் திகதிக்கு பின்னரே வீசா மோசடி தொடர்பில் தமது கருத்தை வெளியிடமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஆத்துடன் தனிப்பட்ட தரவுமீறல் குறித்து ஆராயுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட ஹர்சா, அது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.