;
Athirady Tamil News

பிரான்ஸ் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி

0

பிரான்சில், 10 ஆண்டுகள் செல்லத்தக்க நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டை வைத்திருப்போர் அவற்றை புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகளின் வகைகள்
பிரான்சில் மூன்று வகை நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன, Carte de Résident de 10 ans, La Carte de Résident Longue Durée -UE மற்றும் the Carte de Résident Permanent என்பவை ஆகும்.

இவை ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி அட்டைகள். இந்த அனுமதி அட்டைகள் வைத்திருப்போர், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறவர்களாக இருந்தாலும் (அல்லது சம்பாதிக்கவே இல்லையென்றாலும்) பிரான்சில் வாழ இந்த அட்டைகள் அவர்களுக்கு அனுமதியளிக்கின்றன.

என்றாலும், இந்த அட்டைகள் காலாவதியாவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன் அவற்றை புதுப்பித்தல் அவசியமாகும். அப்படி புதுப்பிக்கவில்லையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் பிரான்சில் வாழ்வதற்கு பிரச்சினைகள் ஏற்படுவதுடன், அவர்கள் 180 யூரோக்கள் அபராதம் செலுத்தும் நிலையும் ஏற்படலாம்.

ஆகவே, கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளை புதுப்பிப்பதால் தேவையில்லாத பிரச்சினைகளையும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.