;
Athirady Tamil News

அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை

0

தனது பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ அல்லது பொதுத் தேர்தலை நடாத்தவோ, அரசியலமைப்பை திருத்தும் திட்டம் எதுவும் ஜனாதிபதியிடம் இல்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என கடந்த வாரம் பல்வேறு தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகளினால் பங்குச் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக வாராந்த அமைச்சரவை மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஊகங்கள்

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெறும் என ஜனாதிபதி தெளிவாக கூறியதாகவும், அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினர்

ஜூன் 15ஆம் திகதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஊகங்கள் வெளியாகி உள்ளதா என வினவியபோது, ​​அந்த ஊகங்களில் எந்த அடிப்படையும் இல்லை எனவும், அவ்வாறான விடயம் தொடர்பில் ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவிக்கவில்லை எனவும் பந்துல தெரிவித்தார்.

இது சிலரின் கனவு மட்டுமே என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.