;
Athirady Tamil News

மீண்டும் கோரப்படும் விண்ணப்பங்கள்: பட்டதாரிகளுக்கு வட மாகாண ஆளுநரின் அறிவிப்பு

0

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு எஞ்சிய ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வட மாகாண கல்வித்துறைக்குள் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்குடன் 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான இந்த ஆசிரியர் நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் (25.05.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடத்தப்பட்டிருந்தது.

ஆசிரியர் நியமனம்

இந்நிகழ்வில் வைத்து உரையாற்றும் போதே வடக்கு ஆளுநர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆசிரியர் பதவிக்கான போட்டி பரீட்சையில் 3000 பேர் தோற்றிய போதிலும், அவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட நேர்முக தேர்வில் தெரிவுசெய்யப்பட்ட 356 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் இன்று வழங்கி வைக்கப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு எஞ்சிய வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாகுறை நிலவுகின்றது. யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்க்காத சமூகம்

மாணவர்களின் உளநலம் தொடர்பில் சிந்தித்து, புதிய தொழிநுட்ப முறைகளை கையாண்டு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

அரச தொழிலை மாத்திரம் எதிர்பார்க்காத புதிய சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு உங்களிடம் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.