;
Athirady Tamil News

மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட சில அமைப்புக்கள் எங்களது போராட்டத்துக்கு வலுச்சேர்காமை கவலையளிக்கிறது.- தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க செயலாளர் முகமது காமில்!

0

கடந்த 26 நாட்களாக எங்களது நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் நிலையில் நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட ஏனைய சங்கங்களும் பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள பல்வேறு சங்கங்களும் அமைப்புக்களும் பத்திரிகை மாநடுகளைகளை கூட்டி எங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வந்துள்ள நிலையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர் அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் இதுவரை பத்திரிகையாளர் சந்திப்புக்களையோ அல்லது ஆதரவான கருத்துக்களையோ வெளியிடாதது கவலையளிப்பதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க செயலாளர் எம்.எம். முகமது காமில் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில் 2024.05.27 ஆம் திகதி பல்கலைகழக முற்றலில் இடம்பெற்ற போராட்டத்தின்போதே செயலாளர் எம்.எம். முகமது காமில் மேற்படி கருத்துக்களை முன்வைத்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஊழியர் சங்கத்தின் தலைவர் தாஜுடீன், 26 நாட்களுக்கு மேலாக பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பிதுத்துள்ள நிலையில் இதுவரை அரசாங்ம் எவ்வித தீர்வையும் வழங்க முன்வரவில்லை. இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் மாணவர்களது எதிர்காலமே பாதிக்கப்படும் இது தொடர்பில் அரசாங்கமோ அல்லது மாணவர்களோ பெற்றோர்களோ தாங்களது கருத்துக்களை முன்வைக்காமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்தார்.

நாங்கள் சொகுசு தேவைகளுக்காக போராடவில்லை. எங்களது போராட்டம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கைக்கான போராட்டம். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலவரங்களின் காரணமாக எங்களது ஊழியர்கள் தங்களது வாழ்வை கொண்டுசெல்ல மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

26 நாட்களாக நாங்கள் போராடிவரும் இவ்வாறான சூழலில் சில பல்கலைக்கழகங்களில் உள்ள மனிதாபிமானமற்ற சிலர் எங்களது நியாயமான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் சூசகமாக சில வேலைத்திட்டங்களை செய்ய முனைகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுகின்றன.

இங்கு கருத்து தெரிவித்த ஊழியர் சங்கத்தின் செயலாளர் எம்.எம். முகமது காமில் பல்கலைக்கழக கட்டமைப்பில் பணியாற்றுபவர்கள் என்ற ரீதியில் கல்விசாரா ஊழியர்களாகிய நாங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்காக குரல் கொடுத்துள்ளோம் இவ்வாறான நிலையில் சிலர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் கூட்டாக கண்டிக்கின்றோம். இவர்கள் எங்களது கஷ்ட்டங்களை உணர்ந்து எங்களுக்காக குரல்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய போராட்டத்தின்போதும் வாக்களிக்கப்பட்ட 107% சம்பள அதிகரிப்பை வழங்கு, உறுதியளித்த 25% MCA கொடுப்பனவை வழங்கு என்பனபோன்ற பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இங்கு; ஒற்றுமையே பலம், சமத்துவமே எம் தேவை, அரசாங்கமே கண்முளித்துப்பார், 8 வருட ஏமாற்றம் இன்னும் தொடருமா?, வேண்டாம் வேண்டாம் பாகுபாடு வேண்டாம், புத்திஜீவிகளை உருவாக்கும் அரச ஊழியர்களாகிய நாங்கள் நடுத்தெருவில் என்பனபோன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.