;
Athirady Tamil News

வீடொன்றில் தீ பரவலில் முதிவருக்கு நேர்ந்த துயரம்

0

வேயங்கொடை – பத்தலகெதர பகுதியில், வீடொன்றில் இன்று வியாழக்கிழமை (29) அதிகாலையில் தீ பரவலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுக்குள்ளான முதியவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வீடொன்றில் தீ பரவலில் முதிவருக்கு நேர்ந்த துயரம் | An Elderly Person Death House Fire

உயிரிழந்தவர் மொரட்டுவத்த, பத்தலகெதர பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவல் ஏற்பட்டபோது முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும், தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வேயங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.