;
Athirady Tamil News
Daily Archives

3 March 2023

சமூக வலைதளங்களில் வெளியான பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் போலியானவை-…

தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேகமாக பரவியது.…

தாக்குதலின் கீழ் இந்திய ஜனநாயகம், கண்காணிப்பின் கீழ் அரசியல்வாதிகள்- ராகுல் காந்தி…

கங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:- ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு…

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவனுக்கு வலை !!

தன்னுடைய மனைவியின் உடலில் ஒருதுண்டு துணி இல்லாமல், அவருடைய கண்கள் மற்றும் கைகளை கட்டிவிட்டு, உடல் முழுவதும் மிளகாய் தூள் பூசிய கணவனைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு^ள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். பாதுக்க அங்கம்பிட்டியவை…

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்!! (படங்கள்)

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண…

தலையைத் தூக்குகிறது ரூபாய் !!

இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை முன்னைய தினங்களுடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்துள்ளது. மத்திய வங்கி இன்று (03) வெளியிட்ட நாணய மாற்று…

அரியலூர் மாவட்டத்தில் மண் குவாரிகள் உரிமம் நிறுத்திவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு!!

சென்னை ஐகோர்ட்டில், அரியலூர் மாவட்டம், சூரக்குழி கிராமத்தை சேர்ந்த ஆர்.கணேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அரியலூர் மாவட்டத்தில் தெற்கே கொள்ளிடமும், வடக்கே வெள்ளாறும், மத்தியில் மருதையாறும் ஓடினாலும், பல பகுதிகளில்…

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!!! (படங்கள்)

வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம்…

சிறப்புற இடம்பெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்டம்!! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்ட நிகழ்ச்சி 03.03.2023 வெள்ளி காலை நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.க. கணபதிப்பிள்ளையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய…

தேர்தலை நடத்த கோரி யாழில் போராட்டம்!! (படங்கள்)

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி…

கொழும்பு மக்களுக்கு அவசர அறிவிப்பு !!

கொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. நாளை (மார்ச் 04) மதியம் 02:00 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 05) வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. இதன்படி, நாளை கொழும்பு 01, 02, 03, 04, 07, 08,…

கொரோனா காலத்தில் வாங்கிய மருத்துவ உபகரணங்கள் ஏலம்- மேயர் பிரியா தகவல்!!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த 28-ந்தேதி நடந்தது. அப்போது, மறைந்த தி.மு.க. கவுன்சிலர் ஷீபா வாசுவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மீண்டும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,802,314 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,802,314 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 680,288,887 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,093,877 பேர்…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன? !!

தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: * காய்ச்சல் பாதிப்பு…

ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் நித்யானந்தாவின் பிரதிநிதி பங்கேற்றது எப்படி? ஐ.நா. விளக்கம்!!

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில், நித்யானந்தாவின் பிரதிநிதிகள் பேசிய கருத்துகளை புறக்கணித்து விட்டதாக ஐநா அறிவித்துள்ளது. இந்தியாவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கைலாசா என்று தனித் தீவு நாட்டுக்கு அதிபர் என்று கூறி…

“IMF கடன் இந்த மாதம் கிடைக்கும்” – தாரக பாலசூரிய!!

இந்த மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகை பெற்றுக் கொள்ளப்படும் எனவும் அதன் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 500 பில்லியன் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். கடன்…

“நாடாளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்”!!

நாடாளுமன்றத் தேர்தலின் மூலமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை விமானப்படை தளத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் கெடட்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் வெளியேறும்…

மனித கடத்தலை முறியடிக்க ஒரு புதிய திட்டம்!!

மனித கடத்தல்காரர்களிடம் இருந்து இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும், ஆள் கடத்தலை தடுக்கும் வகையிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பயோமெட்ரிக் தகவல்களை டிஜிட்டல் மயமாக்கி தரவுத்தளத்தில் சேமித்து வைக்கும் வேலைத்திட்டம்…

பிரபலங்களுக்கு போலி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய விழா ஏற்பாட்டாளர் ஹரிஷ் தலைமறைவு!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அமைப்பின் சார்பில் பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இசை அமைப்பாளர் தேவா, ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் இயக்குனர் கார்த்திக்…

இஸ்ரேல் பிரதமரின் மனைவி சென்ற அழகு நிலையம் முற்றுகை: பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு!!

இஸ்ரேல் நாட்டில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நீதித்துறை மறுசீரமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசின் நீதித்துறை…

அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பிக்கையோடு இருங்கள்- சசிகலா வேண்டுகோள்!!

சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது ஜனநாயக முறையில் நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது. இது…

பிலிப்பைன்சில் ராணுவத்தினர் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!!

தென் கிழக்கு ஆசியாவின் தீவு நாடான பிலிப்பைன்சில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள், கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். குறிப்பாக பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஆனது இங்கு அடிக்கடி தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. அதுபோல அரசுக்கு எதிராக இடதுசாரி…

சமூக ஆர்வலர் மேதா பட்கர் வருகை- ஏகனாபுரத்தில் போலீஸ் குவிப்பு!!

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த புதிய விமான நிலையத்திற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்த…

துபாயில் உலகின் மிக ஆடம்பரமான நட்சத்திர விடுதி: ஒரு நாள் வாடகை ரூ.82 லட்சம்!!

சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகிறது. இந்த நாட்டின் சுற்றுலா இடங்களில் உலகின்…

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும்!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான திருத்தப்பட்ட திகதி இன்று (03) அறிவிக்கப்படவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள்…

கச்சதீவு பெருவிழா இன்றும் நாளையும்!!

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இரு நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில்…

கன்னியாகுமரியில் இருந்து டெல்லிக்கு விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம்- துரைவைகோ தொடங்கி…

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட் டத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் வரை நீதி கேட்டு…

இலங்கையில் வரி அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் விசேட அறிவிப்பு!!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீர்திருத்தம் சர்வதேச நாணய நிதியத்தால் பாராட்டப்பட்டுள்ளது. அமுல்படுத்தப்பட்ட வரி அதிகரிப்பு பொதுமக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட போதிலும் கடனாளிகளின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு இலங்கையில் வரிச்…

ரெயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு!!

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.…

பிபிசி அலுவலகங்களில் நடந்த வரி ஆய்வு: இந்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பிரிட்டன்…

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தபோது, பிபிசியின் மும்பை, டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு குறித்த பிரச்னையை எழுப்பியதாக ராய்ட்டரஸ் செய்தி…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி- தொண்டர்கள் உற்சாகம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.…

இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?

இல்லுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது. ஆனால் சமீப நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள்…

பருவம் தவறிய மழையால் பாதிப்பு- விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணம் ரூ.112.72 கோடி வழங்க…

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 இலட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

இலங்கைக்கு நேர்ந்தது பாகிஸ்தானுக்கும் ஏற்படுமா? சீன கடன் குறித்து பொருளாதார நிபுணர்கள்…

பாகிஸ்தானின் மத்திய நிதியமைச்சர் இஷாக் டார், சீனாவிடம் இருந்து 700 மில்லியன் டாலர் கடனாக கிடைக்கப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தானின் குறைந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு சிறிது அதிகரிப்பது அவரது மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். ஆனால்…

ஈரோடு கிழக்கு பார்முலாவை உருவாக்கி ஜனநாயக படுகொலை- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். 15 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1,10,556 வாக்குகளை பெற்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர்…