வேகமாக சுழல்கிறதா பூமி? வரலாற்றில் மிகக் குறைந்த நேரம் கொண்ட நாளாக ஜூலை 9 பதிவு

பூமி வேகமாக சுழல்வதன் காரணமாக, வரலாற்றிலேயே மிகக் குறைந்த நேரம் கொண்ட நாளாக ஜூலை 9ஆம் தேதி பதிவாகியிருக்கிறது. வரும் நாள்களிலும் இது தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 86,400 வினாடிகள் அல்லது 24 மணி நேரங்களைக் கொண்டதாக ஒரு முழு நாள் அமையும். ஆனால், ஜூலை 9ஆம் தேதி 1.3 முதல் 1.51 கண நேரம் (மில்லி செகண்ட்) குறைந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி வேகமாக சுழல்வதன் காரணமாக இது நேர்ந்திருக்கலாம் என்றும் வரும் வாரங்களிலும் பூமி வேகமாக சுழலாம், அதனால், ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5ஆம் தேதிகளிலும் இதுபோன்ற நேரம் குறையலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
பூமியின் மையக் கருவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அல்லது பூமிக்கு மிக அருகே சந்திரன் வந்திருப்பது, பருவநிலை மாற்றம் போன்றவை, இதற்குக் காரணங்களாக அமையலாம் என்று, பூமியின் சுழலும் வேகம் அதிகரிப்பது நல்லதல்ல என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பூமிக்கு மிக அருகே சந்திரன் வந்திருப்பது, பூமியின் சுழலும் அமைப்பில் லேசான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம், அதனால், பூமி சற்று வேகமாக சுழன்று, ஒரு நாளின் நேரம் குறைந்திருக்கலாம். நமது பூமி ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரங்கள் ஆகும்.
சூரியன், சந்திரன் போன்ற பல காரணிகள், பூமியின் சுழலும் தன்மையில் பூமியின் புவிஈர்ப்பு விசை காரணமாக மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே, பூமி சற்று வேகமாக சுழன்றிருக்கலாம் அல்லது மெதுவாக சுழன்றிருக்கலாம் இதனால், அந்த நாளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த நாளில் குறைந்த அந்த நேரத்தை, பூமி அடுத்து வரும் நாள்களில் சரிகட்டுமா என்றும் பூமிப் பந்தின் நேரத்தை அளவிட்டுவரும் அதிகாரிகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு மிக அருகே நிலவு வந்திருப்பது மட்டுமே, பூமியின் சுழலும் வேகம் அதிகரிக்கக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும், இவை அனைத்தும் யூகங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முன்னெப்போதும் நிகழாத அரிய நிகழ்வு என்றும், மிகப்பெரிய விஷயம் என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
அதுபோல, நிலவு தொலைவாகச் சென்றபிறகு பூமியின் சுழற்சி வேகம் குறையலாம், அப்போது, நீண்ட நேரம் கொண்ட நாளாக வரலாற்றில் பதிவாகலாம். உலகம் சுழல்வதை கணிக்கும் பணியானது 1970ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், 2020ஆம் ஆண்டு முதல்தான், பூமி வேகமாக சுழல்வது பதிவாகி வருகிறது.