;
Athirady Tamil News

மனைவியிடம் கட்டாயம் கேட்க வேண்டிய இரண்டு கேள்விகள்…. !! (கட்டுரை)

0

விட்டுக்கொடுத்து போவது, இது தான் உறவைவிட்டுப் பிரியாமல் இருக்க கணவன், மனைவியை பாதுகாக்கும் பாலம், பிணைப்பு, கெமிஸ்ட்ரி என எப்படி வேண்டுமானாலும் கூறலாம்.

ஆனால், தொடர்ந்து விட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பது, ஓர் கட்டத்திற்கு மேல் உங்கள் உறவில் இருக்கும் சுவாரஸ்யம், காதல், அக்கறை போன்றவை குறைய காரணியாக இருக்கிறது என்பதை நாம் அறவே மறந்துவிடுகிறோம்.

காலப்போக்கில், முப்பதுகளின் இறுதியல், பல உறவுகளில் பிரிவும், கசப்பும் உண்டாக காரணம், நீங்கள் உங்கள் இல்வாழ்க்கையில் உங்கள் துணையிடம் கேட்க மறந்த இந்த இரண்டு கேள்விகள் தான். ஆம், அந்த இரண்டு கேள்விகள் மிகவும் எளிமையானவை. ஆனால், நாம் கேட்க மறந்தவை…

1) எந்த பரஸ்பர விஷயம் உறவை அதிகம் நேசிக்க வைத்தது?

2) எந்த பரஸ்பர விஷயம் உறவை வெறுக்க வைத்தது?

இந்த இரண்டு கேள்விகளை உங்கள் துணையிடமும், உங்கள் மனதிடமும் அவ்வப்போது நீங்கள் கேட்டிருந்தால், உங்கள் இல்லற வாழ்வில் கசப்பு குறைந்து, எந்நாளும் பொன்னான நாளாக மிளிர்ந்திருக்கும்.

கணவன், மனைவிக்கு பிடித்த விஷயங்களில் மாற்றம் பெரிதாக வரப்போவதில்லை. ஆனால், சில சூழல்களில் நாம் எடுக்கும் முடிவுகள் தான், பிரியத்தில் இணக்கம் அல்லது வெறுப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது.

கணவன், மனைவி எந்த செயலில் ஈடுபடுவதாக இருப்பினும், அது குறித்து உங்கள் துணை என்ன நினைக்கிறார், அதில் அவருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா? அல்லது அவர் கூறும் மாற்றுக் கருத்து சரியானது அல்ல எனில், அதை அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

இவற்றை நீங்கள் சரியாக செய்து வந்தாலே உங்கள் இல்லறம் என்றும் நல்லறமாக சிறந்து விளங்கும்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.