;
Athirady Tamil News

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில், மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் “M.F” ஊடாக வழங்கி வைப்பு.. (வீடியோ & படங்கள்)

0

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில், மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் “M.F” ஊடாக வழங்கி வைப்பு.. (வீடியோ & படங்கள்)

##############################

சுவிஸ் நாட்டில் வாழும் ஈழத்து சொந்தம் தருமலிங்கம் சுபாஸ்கரன் செல்லமாக அனைவராலும் ராஜூ என அழைக்கப்படும் சுபாஸ்கரன் அவர்கள் தனது பிறந்தநாளில் தாயகத்தில் வாழும் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம்” விடுத்த வேண்டுகோளுக்கமைவாக, இன்றைய தினம் கூமாங்குளம், ஓமந்தை, சகாயமாதாபுரம், கோவில்குளம், வவுனியா நகர், கற்குழி, திருநாவற்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய தினம் பாடசாலை நாளாகும் எனவே பாடசாலை முடிந்தவுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தில் அலுவலகத்திற்கு ஒருசில மாணவர்கள் வருகை தந்தனர். சில மாணவர்கள் வீட்டுக்கு சென்று தமது தாய் தந்தையருடன் வந்திருந்தனர். சில மாணவர்களின் தாயார் மட்டுமே தமது பிள்ளைகள் சுகயீனம் காரணமாக வரமுடியாத நிலையை ஆதாரத்துடன் காட்டியதால் அவர்களுக்கும் கற்றல் பொதி வழங்கப்பட்டது.

இன்றைய சுபாஸ்கரன் அவர்களது பிறந்த நாளில் கற்றல் பொதி வழங்கும் நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கென்னடி அவர்கள் கலந்து கொண்டு ஒருசில மாணவர்கள் வரும்வரை காத்திருந்து மாணவர்களுக்கான கற்றல் பொதிகளை வழங்கி வைத்தார். அத்துடன் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பிரதம ஆலோசகர்களில் ஒருவரான திரு.மாணிக்கம் ஜெகன் அவர்களும் வழங்கி வைத்தனர்.

அத்தோடு இன்றைய நாளில் பிறந்த நாளைக் காணும் சுபாஸ்கரன் அவர்களின் பங்களிப்பில் பெரும் தொகையான மாணவர்களுக்கான கற்றல் பொதி வழங்கும் நிகழ்வை, வவுனியா மாவட்ட சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கென்னடி அவர்கள் பாராட்டியதோடு, ராஜூ அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்தார்.

பலவிதமான தேவைகளோடும், குடும்ப சிக்கலோடும் பாடசாலைக் கல்வியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பற்றாக் குறையானது அவர்களது நாளாந்த கற்றல் செயற்பாடுகளுக்கு பெருந்தடையாக இருப்பதாகவும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” மூலமாக இவ்வாறான கற்றல் பொதி தங்களுக்கு மிகவும் பிரயோசனமாகவும் இருப்பதாகவும் நிகழ்வுக்கு வந்து கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது கருத்தை தெரிவித்தனர். நன்றி..

“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்!..

தகவல் & படங்கள்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

28.01.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.